நாடளாவிய ரீதியில் இன்புலுவென்சா நோய்த் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் பொது மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறு சிறீலங்கா சுகாதார சேவைகள் பணியகம் தெரிவிக்கின்றது.
காய்ச்சல், தலைவலி, உடல் வலி, தடுமல் உள்ளிட்ட நோய் தாக்கங்கள் முன்னறிகுறியாக தென்படும் பின்னர் நோய் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வைத்திய ஆலோசனைகளை உரிய விதத்தில் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் பிரகாரம் இந்த நோய் தொற்று உள்ளதாக அறிந்துக்கொண்டவர்கள் அதின சன நடமாட்டம உள்ள பகுதியிலி சென்று நிற்பதை தவிர்க்க வேண்டும், தடுமல் அல்லது தும்மல் ஏற்படுகின்ற போது மூக்கை துவாய் ஒன்றினால் மறைத்துகொள்ள வேண்டும், தரமான ஒரு வைத்தியரை உடனடியாக நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.
சிறீலங்காவில் அதிகரித்துவரும் தொற்று நோய் காரணமாக கட்டார் தனது நாட்டு மக்களை சிறீலங்கா செல்வதை தவிற்குமாறு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.