முல்லை மாவட்டம் ஆனந்த புரத்தில் 2009 ஆம் ஆண்டு சிங்களப்படைகளின் இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த மூத்த தளபதிகள் மற்றும் மாவீரர்களுக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 08.04.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு porte la chaplle பகுதியில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச் சுடரினை 01.05.2008 அன்று முகமாலை வெற்றிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்ரினன்ட் இசைப்பிரியனின் சகோதரன் அவர்களும், 1996 இல் கிளிநொச்சிப் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் பூபாளனின் சகோதரன் அவர்களும் 2001 இல் திருகோணமலைக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்த 2 ஆம் லெப்டினன்ட் ஆதவனின் சகோதரன் அவர்களும் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரிகேடியர் விதுசா அவர்களின் நினைவாக ஜெயகாந்தன் அகவிழியும், பிரிகேடியர் துர்க்கா அவர்களின் நினைவாக ஜெயகாந்தன் அகச்சுரபியும் கவிதை வாசித்தளித்தனர். கோகிலதாஸ் சூரியா திலீப்குமார் திசாளினி ஆகியோரின் எழுச்சி நடனங்களும் பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழக இசைக்குழுவினரின் ஆனந்தபுர நாயகர்கள் நினைவான எழுச்சிகானங்கள் இடம்பெற்றன. எழுச்சிகானங்களை கலைபண்பாட்டுக்கழகப் பாடகர்களான முகுந்தன், ராஜலிங்கம் றொசான், எட்வேட் லூயிஸ் அனோஜினி, கோகிலதாஸ் சூரியா, திலீப்குமார் திசாளினி ஆகியோர் மிகவும் சிறப்பாக பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் செயற்பாட்டாளர் திருமதி அருளேந்திரகுமார் ஜீவனா ஆற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் திரு.கோகுலன் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் ஆனந்த புரத்தில் இடம்பெற்ற எதிரியின் நயவஞ்சகத்தனமான செயற்பாடுகள் குறித்தும் தாம் போர்க்களத்தில் குறித்த தளபதிகள் உடன் பெற்ற அனுபவங்கள் தொடர்பிலும் எடுத்துவிளக்கினார். இது அனைவரையும் கண்கலங்கவைத்திருந்தது. ஆரம்ப காலங்களில் புலம்பெயர் மக்களின் பணி மகோ உன்னதமானது என விபரித்த அவர் அதற்கு நன்றி தெரிவித்திருந்த அதேவேளை, புலம்பெயர் மக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகத் தொடர்ந்து தமது பணிகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் மிக மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு)