நல்லூர் ஸ்தான் – பிரான்சு 13 வது தடவையாக நடாத்திய ”கார்த்திகை விதைகள்” சொல்வதெழுதல் தமிழ்த் திறன் போட்டி. கடந்த 02.04.2017 அன்று காலை 9.30 மணிக்கு செவரோனில் அமைந் துள்ள முள்ளிவாய்கால் நினைவு கல்லிற்கு ஈகச்சுடர் ஏற்றி அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
ஈகைச்சுடரினை புலனாய்வுப்பிரிவில் வீரகாவியமான வசந்தனின் சகோதரி ஏற்றிவைத்தார்.
பிரான்சி வாழும் தமிழ் சிறார்களின் தமிழை பிழையின்றி எழுதும் திறனை வளர்ப்பதற்காக ஆண்டு தோறும் ‘கார்த்திகை விதைகள்’ நினைவாக தமிழ்த்திறன் போட்டி நடாத்தி வருகின்றனர்.
இவ்வாண்டு 13 வது ஆண்டாக தமிழ்த்திறன் போட்டி செவறோனில் நடத்தப்பட்டது. இப் போட்டி வயதடிப்படையில் சொல்வதெழுதல் நடாத்தப் பட்டதுடன். 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மொழி பெயர்பு போட்டியையும் உள்ளடக்கி நடைபெற்றது.
இந்த வருட்ம் 600 வரையான பிள்ளைகள் பங்குகொண்டனர். போட்டிகளுக்கு பிள்ளைகளின் பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிப்பது தமிழ் மொழியின் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றையே காட்டி நிற்கிறது.
இப் போட்டிகள் ஏழு பிரிவுகளாக சிறப்பாக நடைபெற்றன.