தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நினைவில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய பல போர்க்களங்கள் நாம் கண்டுள்ளோம்.
வியப்பின் உச்சியில் ஆழ்த்தக்கூட்டிய சாதனைகளைப் படைத்த வீரவரலாறுகள் எமக்கே சொந்தம். உலக விடுதலைப் போராட்டங்களை எடுத்துப் பார்க்குமிடத்து அவற்றை விஞ்சிய தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் எங்கள் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமது வாழ்க்கையாகவே கருதி வாழ்ந்துள்ளார்கள் என்பது புலப்படும். ஒவ்வொரு மாவீரர்களின் வாழ்க்கையும் ஒரு பெரிய சரித்திரமே. உலகின் மிகச்சிறந்த தலைமைத்துவைத்தால் வழிநடத்தப்பட்ட வீரஞ்செறிந்த விடுதலைப்பாதை பல பாடங்களையும் எமக்குக் கற்றுத்தந்துள்ளது என்றால் மிகையல்ல.
அந்த வகையிலே மிக வித்தியாசமானதொரு காளமாக ஆனந்தபுரத்தில் நிகழ்தேறியே முற்றுகைபோர் விடமுடியாத மனங்கனக்கின்ற ஒரு நெருக்கடி நிறைந்த சூழ்நிலையின் யதாரத்தம். இன்னும், ஆனந்தபுரத்தில் நடந்தேறிய முற்றுகைப்போரை முழுவதுமாய் எழுதுவதென்பது இலகுவானதல்ல. இருப்பினும் தொடர்கிறேன். பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்போர், பல பரிமாணங்களைக் கடந்தும் நடந்து கொண்டிருந்தாலும் 2006 தொடக்கம் 2009ம் ஆண்டு வரை மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு உலக வல்லாதிக்க நாடுகளின் முழுமையான ஒத்துழைப்போடு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழினவழிப்பின் கொடூரத்தை ஒருபோதும் மறந்துவிட முடியாது.