யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய அரசியல் பொருளாதார தலைமை அதிகாரி போல்கோப்றி யாழ் . நகரிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள், சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது. இதன் போதே மேற்படி இரண்டு தரப்பினரும் இணைந்து செயற்படுவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இச் சந்திப்பு குறித்து முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையில்,
வடக்கு மாகாண மக்களுடன் இணைந்து தங்களுடைய நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லலாம் என்பதிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அதிக கவனம் செலுத்தியிருந்தனர். ஏனெனில் கடந்த காலங்களில் வடக்கு மாகாண சபையுடன் சேராமலும,; இங்குள்ள நிலைமைகளை அறியாமலும் ஐரோப்பிய ஒன்றியம் செயற்பட்டு வந்ததனை நான் ஏற்கனவே அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன்.
அதனடிப்படையில் அவற்றைக் கருத்திலெடுத்து தற்பொது வடக்கு மாகாண சபையுடன் இணைந்து புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுவதாக கூறியுள்ளனர். இதற்கமைய எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.