டெங்குக் காய்ச்சலால் 42 வயது குடும்பத்தார் உயிரிழப்பு.!

0
389

டெங்குக் காய்ச்சல் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஐ.எம் இப்றாலெப்பை தெரிவித்தார்.
கல்லடியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கூட்டுறவுத் திணைக்களத்தின் கணக்காய்வுப் பிரிவில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிவந்த எஸ். சிறீகாந்த் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
டெங்குக் காய்ச்சல் காரணமாக இவர் சில தினங்களாக தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
டெங்குக் காய்ச்சல் காரணமாக இவருடன் சேர்த்து இதுவரையில் மட்டக்களப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here