கணினியி தமிழ் எழுத்து தந்தை கலாநிதி எஸ்.விஜயகுமார் காலமானார்

0
256


தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும்.
இவரது உடல், இன்று (02)மாலை 17.00 மணி தொடக்கம் இரவு 21.00 மணி வரையிலும், நாளை ( 03) காலை 9.00 மணி தொடக்கம், 11 .00 மணி வரையிலும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, ON, Canada என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது. அப்போது கலாநிதி விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டன.
கணனி தமிழில் ‘ரெமிங்ரன்’ முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கணினியில் உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here