டெங்கு நோய் அதிகரிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒரு வார காலத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயினால் அங்குள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகள், பிற பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனக்கள் ஆகியவை ஒரு வார காலத்துக்கு மூடப்படும் ஒரு வாரத்துக்கு மூடுமாறு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணித்துள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தில் இதுவரையில் 190 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் சுமார் 6 சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் யு.எல்.நஸிர்தீன் தெரிவித்துள்ளார்.