முல்லைத்தீவு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்றையதினம்(30) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகக் ஒன்றிணைந்த பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பினை உடன் வழங்கவேண்டும் எனவும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த ஒருமாதகாலமாக தொடர்ந்து போராடிவருவதாகவும் இதுவரையில் இதற்கு நல்லதொரு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் இதனால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றையதினம் குறித்தத கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நல்லாட்சி அரசு விரைவில் தமது கோரிக்கையினை ஏற்று நல்லதொரு முடிவினை தரவேண்டும் என்றும் நாட்டில் பட்டம் பெறாதவர்கள் எல்லாம் அரச துறைகளில்அரசியல் வாதிகளின் அனுசரனையோடு வேலை புரிகின்ற போது தாங்கள் மட்டும் வேலையில்லாது வீதியில் அலைவதாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமது கோரிக்கை மகஜர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்காக முல்லை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரிடம் ஒப்படைத்திருந்தனர்.