காவற்துறையினரைத் தாக்கிய Shaoyo Liu வின் கொலையினை அடுத்துப் போராட்டங்கள் பல திசைகளில் கிளம்பி உள்ளன. திங்கட்கிழமை (27.03.2017) பரிசு பத்தொன்பதின் காவல் நிலையத்தைச் சுற்றிவளைத்த 150ற்கும் மேற்பட்ட சீனா மற்றும் அதன் அண்டைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கலவரங்களில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரின் வாகனங்கள் மீது கற்களை வீசியதில் காவல்துறையினரின் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்துள்ளன.
இந்த வன்முறைகளில் ஈடுபட்டவர்களில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.