ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுவதற்காக சட்ட நடவடிக்கைகளைத் துவங்குவதற்காக பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்ட நிலையில், அதுதொடர்பான 6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் சர் டிம் பாரோ இன்று (29) கையளித்திருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான நடவடிக்கைகளை முறைப்படி தொடங்குவதற்கான கோப்பில் பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்டார்
லிப்சன் உடன்படிக்கையின் அரசியல் சட்டப்பிரிவு 50-இன் கீழ், இது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க்கிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.
“நம் நாடு ஒன்றிணைந்து இருக்க வேண்டிய தருணம் இது” என்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரித்தானிய பிரதமர், பிற எம்.பிக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.