முள்ளிக்குளம் மக்களை சந்தித்தார் மன்னார் மறைமாவட்ட ஆயர்

0
104


முள்ளிக்குளம் பகுதியிலுள்ள தமது பூர்வீக நிலங்களை சிறீலங்கா கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்களை நேற்றையதினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் சந்தித்துள்ளார்.
சிறீலங்கா கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணிகளை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினருடன் ஆயர் ஜோசப் சிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
நீண்ட நேரமாக போராட்டத்தில் ஈடுபடும் மக்களுடன் கலந்துரையாடிய ஆயர், இப் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொண்டு தீர்வுக்கான முயற்சிகளில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here