வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சங்குப்பிட்டி பாலத்தருகில் இடம்பெற்றுள்ளது.
இதில் வீரசிங்கம் வீதி கச்சாய் சாவகச்சேரியைச் சேர்ந்த சண்முகம் கிருஷ்ணசாமி (வயது 47) என்பவரே உயிரிழந்தவராவார்.கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலத்தி அருகில் இருந்த கல்லில் மோதியதிலேயே மேற்படி விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.