சிறீலங்கா அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதில் நம்பிக்கையீனம் அதிகரித் துச் செல்கின்றது. தற்போது வழங்கப்பட்ட கால அவகாசமே சிறீலங்காவுக்கு வழங்கப்படும் இறுதிக் கால அவகாசமாக இருக்கும். இவ்வாறு இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் ஹென்ஸ் வோக்கர் தெதர்கோன் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை மாணவர்களை, பல்கலைக்கழகத்தில் தூதுவர் நேற்று () சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது சட்டத்துறை மாணவர்கள், ஜெனிவாத் தீர் மானம், நிலைமாறு கால நீதிப் பொறிமுறை, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் கேள் விகளை எழுப்பினர். அதற்குப் பதில் வழங்கும் போதே தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.
‘‘உலகில் மிகச் சிறந்த கூட்டாட்சி முறைமையைக் கொண்ட நாடாக சுவிஸ் உள்ளது. அவ்வாறான ஆட்சி முறைமையை இலங்கையில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது’ என்று எழுப்பிட் ட்ட கேள்விக்குப் பதிலளிக்கை யில், எங்கள் நாட்டின் ஆட்சிமுறையை இலங்கையில் நடைமுறைப் படுத்தலாம் என்ற மனோநிலை எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் சிறீலங்கா அரசு அதனை எந் தளவு தூரம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. கூட்டாட்சி நடைமுறைப்படுத்தப்பட் டால், தென்னிலங்கை, வடக்கு இலங்கை என்று பிரிவினைவாதம் ஏற்பட்டுவிடும் என்று அரசு சிந்திக்கக் கூடும். அதனால் பின்னடிக்கலாம் என்று குறிப்பிட்டார்.
‘இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான உங்களது நிலைப்பாடு என்ன ?’ என்று எழுப்பப் பட்ட கேள்விக்கு, இது தொடர்பில் உரிய நடவடிக்கை தேவை என்பது எங்களின் நிலைப்பாடு. ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கால அவகாசம் கேட்கின்றது. உறுதி மொழிகளை உரியமுறையில் நிறைவேற்றுமா என்று நம்பிக்கையீனம் அதிகரித்துள்ளது. இலங் கைக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்கு எமது நாடு வழங்கும் இறுதி ஆதரவு இதுவாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
‘இங்கிருந்து பெருமளவானோர் உங்களது நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி வருகின்றனர். அவர்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன ?’ என்று சட்டத்துறை மாணவர்கள்வின வியதற்கு, தற்பொழுதும் இங்கிருந்து அகதி அந்தஸ்து கோரி எமது நாட்டுக்கு வருகின்றனர். போருக் குப் பின்னர் அகதி அந்தஸ்து வழங்கப்படவேண்டிய தேவைப்பாடுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. உண்மையில் நாட்டில் பிரச்சினை இருக்கின்றது என்று நியாயமான கோரிக்கை முன்வைக்கப்பட்டால் அவை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.