சாவகச்சேரி பொதுச் சந்தையில் பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக பனையோலை உமல்களும் துணிப் பைகளும் அடுத்த வாரத்தில் விற்பனைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளதாக நகரசபை செயலாளர் கா.சண்முகதாசன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து முதற்கட்டமாக சந்தை வியாபாரிகளால் பயன்படுத்தும் பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக கடலுணவு விற்பனைப் பிரிவில் பனையோலை உமல்களும் சீமெந்து உறைப் பைகளும் பயன்படுத்தப்படவுள்ளன.
பொதுச் சந்தையில் பொலித்தீன் பைகள் போடுவதற்கென தனியான தொட்டிகள் வைக்கப்படவுள்ளன எனவும் சந்தைக்கு வரும் நுகர்வோர் தமது குடியிருப்புகள் மற்றும் காணிகளில் காணப்படும் பொலித்தீன் பைகளை எடுத்து வந்து இந்தத் தொட்டியில் இடுவதன்மூலம் ஒவ்வொரு குடியிருப்பாளர்களும் சுற்றாடல் மாசடைவதைத் தடுக்க முடியமெனவும் தெரிவித்தார் .