பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர்நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டி – 2017 இன் இரண்டாம் நாள் போட்டிகள் 26.03.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.
தாயகத்தின் விடுதலைக்காகவும் எம்சந்ததியின் சுதந்திர நல்வாழ்வுக்காகவும் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைந்து ஒவ்வொரு மாதமும் வணக்கம் செலுத்தி ஏற்றும் ஈகைச்சுடருடன் ஆரம்பமாகியது. ஈகைச்சுடரினை 19.08.1989 இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் வண்ணனின் சகோதரி அவர்கள் ஏற்றிவைக்க மாவீரர்கள் மக்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டது.இரண்டாம் நாளான போட்டியில் விண்மீன்கள் வி. கழகம் , யாழ்டன் வி. கழகம் ,தமிழர் வி.கழகம் 93 , வல்வை புளுஸ் வி.கழகமும் பங்கு பற்றிச் சிறப்பித்திருந்தன. போட்டிகள் யாவும் வீரர்களின் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாக நடைபெற்றன.