கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் 26 ஆவது நாளாக தொடர்கிறது .

0
588

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றும் தொடர்கிறது .சொந்த நிலத்திற்கு செல்வதற்காக வீதிகளில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் ஒன்றிணைந்து
இருபத்தாறு நாட்கள் தொடரும் போராட்டத்திற்கு இதுவரை எந்தவாரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.தமது சொந்தநிலங்களை சிறீலங்கா இராணுவம் கையகப்படுத்தியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
இன்றையதினம் தமது போராட்ட இடத்துக்கு கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுக்கு தங்களுடைய நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதோடு ஏழு நாள் கால அவகாசத்தையும் வழங்கினர் அனைவருமாக கலந்துரையாடி எமது பிரச்சனைகளை உரிய இடத்துக்கு கொண்டுசென்று தமக்கான நல்ல தீர்வை பெர்று தருமாறு ம் தாம் எதிர்நோக்கும் பல்வேறு துன்பங்களையும் எடுத்துரைத்தனர் நீகள் உரிய தீர்வு பெற்றுத்தராத பட்சத்தில் போராட்ட வடிவங்களை மாற்றி போராடுவோம் எனவும் உயிரிழப்புக்கள் நிகழ்ந்து சரி காணிக்கு செல்ல வேண்டி ஏற்ப்படலாம் எனவும் தெரிவித்தனர்
இந்த சந்திப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் சிவப்பிரகாசம் சிவமோகன் சாந்தி சிறீஸ்கந்தராஜா வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா டெனிஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான து ரவிகரன் க. சிவநேசன் ஆ .புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here