சிவா பசுபதி கமம், சரஸ்வதி கமம் மற்றும் ஜொனி குடியிருப்பு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பன்னங்கண்டி கிராமத்தில், 1990 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்டவர்களுக்கு, காணி உரிமம் கோரி சிவா பசுபதி கமம் மக்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 நாள் போராட்டத்தின் பின்னர், காணி உரிமையாளரின் சம்மதத்தை அடுத்து, காணி உரித்து மற்றும் வீட்டுத் திட்டங்களை வழங்குவதாக அரசாங்க அதிபர் வாக்குறுதியளித்ததால் கடந்த சனிக்கிழமை (18) போராட்டம் கைவிடப்பட்டது.
சிவா பசுபதி கமம் மக்களுக்கு, தீர்வு வழங்கியதைப் போன்று தமக்கும் காணி உரிமைபத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என கோரி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனி குடியிருப்பு மக்கள் கடந்த (22) முதல் ஆரம்பித்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.
தமக்கான காணி உரிமம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
Home
ஈழச்செய்திகள் கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்கள் காணி உரிமம் கோரி போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது