இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆறு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
புதிய பிரேரணையை அமுலாக்கம் செய்வதற்காக 362000 டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் வெ ளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்காக 362000 டொலர்கள் தேவைப்படுகின்றன.
மேலும் இலங்கை எவ்வாறு 2015 ஆம் ஆண்டு பிரேரணையை நடை முறை படுத்துகிறது என்பதனை மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆறு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். 14 நாட்களில் இந்த விஜயங்கள் அமையவுள்ளன.
கடந்த வியாழக்கிழமை இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி ஐககிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.