பிரித்தானிய நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்று (22) இரவு முதல் ஆறு வீடுகளில் சோதனை நடத்திய லண்டன் காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் ஏழு பேரை கைது செய்திருப்பதாக பிரித்தானிய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
லண்டன், பர்மிங்ஹாம் மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் நேற்றிரவு தொடங்கி தொடர்ந்து புலனாய்வு செய்துவருவதாக தெரிவித்தார்.
தாக்குதலாளி சர்வதேச பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகி நாற்பதற்கு மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 29 பேரில், ஏழு பேரில் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன .