நேற்று (22) வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் நாடாளுமன்ற அவைகளுக்கு வெளியே நடந்த தாக்குதல்களுடன் இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஐவர் பலியாகி உள்ளதுடன் நாற்பதற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்டவரின் அடையாளத்தை தாங்கள் அறிந்திருப்பதாகவே கருதுவதாக தெரிவித்த லண்டன் பெருநகர பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தலைவர் மார்க் ரோவ்லி, இது குறித்து மேலதிக தகவல்களை தெரிவிக்கவில்லை.
வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது ஒரு மகிழுந்து மோதிய போது, மூவர் கொல்லப்பட்டுட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பின்னர், காரில் இருந்த அந்த தாக்குதல்தாரி நாடாளுமன்ற வளாக மைதானத்துக்கு சென்று தான் சுடப்படுவதற்கு முன்னர் அங்கு இருந்த ஒரு காவல்துரியினரை கத்தியால் குத்தினார்.