பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நால்வர் பலி; 20 பேர் காயம்

0
165

 

பிரித்தானிய  நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (22)  நடந்த தாக்குதலில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியவரும் அவரால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரியும் இதில் அடங்குவர். இதையொட்டி மிகப்பெரும் தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று மாநகர காவல்துறை துணை ஆணையர் மார்க் ரௌலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாக்குதலை அடுத்து நாட்டியின் அதியுயர் பாதுகாப்புக் குழுவின் அவசரக் கூட்டம் பிதமர் தலைமையில் இரவு நடக்கிறது.
மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எட்டு பேரில், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அதன் துணை மருத்துவ அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
லண்டன் மாநகர வீதிகளில் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாநகர காவல்துறையும், உள்துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தை “பயங்கரவாத தாக்குதலாக” கருதுவதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது

முன்னைய செய்தி .

பிரித்தானிய பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் பகுதியியல் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுபவரால் நடக்கவிருந்த தாக்குதலை முறியடித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சந்தேக நபர் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு முன், வாகனத்தின் மூலம் 10 பேர் வரையில் மோதியுள்ளதாகவும், வெஸ்ட்மினிஸ்டர் பாலத்திற்கருகில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
அத்தோடு சந்தேக நபர் கத்தி ஏந்திய வந்த நிலையில் பாராளுமன்ற காவலதிகாரியை தாக்கவே, அவரை சுட்டு வீழ்த்தியதாகவும், குறித்த தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதலுக்கான சதி என கருதுவதோடு, பாராளுமன்றின் உள்ளிருந்தோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் குறித்த தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here