இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஜெனிவா மனித உரி மைகள் சபையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் அடிப்ப டையில், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங் கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக் கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இந்த அமர்வில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு அமைவாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையை இந்த அமர்வில் இன்று வெளியிடவுள்ளார். ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையின் வரைவு கடந்த 3 ஆம் திகதி வெளியாகியிருந்தது. அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் மிகக் காட்டமான கருத்துக்களை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்திருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முன்கூட்டியே வெளியாகியிருந்தாலும், அதில் அவர் முன்வைத்திருந்த பரிந்துரைகள் இலங்கை தொடர்பில் நாளை சமர்ப்பிக்கப்பட வுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.