கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் என சிறீலங்கா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். அத்துடன் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய முடியும் என்ற கோரிக்கைக்கு தான் உடன்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறீலங்கா பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பராமுகத்துடன் அரசாங்கம் இருக்கின்றது என்ற தொனிப்பட கருத்துக்களை வெளி யிட்டார்.
இதன்போது குறுக்கீடு செய்த சுவாமிநாதன், கேப்பாப்புலவு மக்கள் பிரச்சினை தொடர்பாக நான் கடந்த வெள்ளிக்கிழமை சிவமோகன் எம்.பி. உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடத் தினேன். இதன்போது கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு காண முடியும் என்றார்.
அதனைத்தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறீதரன் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் வாடுவதாகவும் அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படா திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அச்சமயத்தில், எழுந்த சுவாமிநாதன், அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போது வழக்கு தொட ரப்பட்டவர்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே இது குறித்து அவதானம் செலுத்த முடியும் என்றார்.
இதன்போது சிறீதரன் எம்.பி. அவர்களுக்கு பிணை வழங்க முடியுமல்லவா? என வினாத்தொடுத்தார்.
அதன்போது சிறீலங்கா அமைச்சர் சுவாமிநாதன்,; பிணை வழங்கி விடுதலை செய்ய முடியும் என்ற விடயத்தில் உடன்படுகின்றேன் என்றார்.
Home
ஈழச்செய்திகள் கேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு என்கிறார் எம் சுவாமிநாதன் ?