கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கவேண்டுமென தெரி வித்து கடந்த 13 நாட்களாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்ற நிலையில் அவர்களில் இருவர் கடந்த மூன்று தினங்களாக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது.
நேற்று மூன்றாவது நாளாக நீராகாரம் எதுவுமின்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடு பட்டு வந்தவர்களையும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களையும் பாராளுமன்ற உறுப்பி னர்களான சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டிருந் தனர்.உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டு தற்போது நடைபெற்றுவரும் போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும்வரை முன்னெடுக்குமாறும் இந்த உண்ணாவிரத போராட் டத்தால் உடனடியாக காணிகள் விடுவிக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடருமானால் உயிர்கள் போகும் நிலைகூட ஏற்படலாம். இதற்கெல்லாம் சிறீலங்காஅரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வராது. எனவே நீங்கள் உங்கள் முடிவில் மாற்றத்தை கொண்டுவாருங்கள். உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு ஏற் கனவே பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்ததுபோன்று தொடர் போராட்டத்தை மட்டும் முன்னெ டுங்கள் என்றும் எம்.பி. க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தாம் இந்த காணிவிடுவிப்பு தொடர்பில் உரிய தரப்பினருக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதா கவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதாகவும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உண்ணா வி ரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இரு வரும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்நிலையில் போராட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சாந்தி சிறீஸ் கந்தராசா ஆகியோரால் குளிர்பானம் வழங்கி முடித்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் காவு லன்ஸ் மூலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.