பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவைச் சுமந்த உதைபந்தாட்டப் போட்டி 2017
எமது தேசக்காற்றிலும், மூச்சிலும் ஒவ்வொரு தமிழரின் உயிருள்ள வரை இதயக்கோயிலில் வாழ்ந்து வரும் தமிழீழ தேசிய மாவீரர்கள் நினைவாக பல்வேறு செயற்பாடுகள் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு ஆண்டு தோறும் மாவீரர்கள் நினைவாக உதைபந்தாட்டப் போட்டி, மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளையும் பல்வேறு நெருக்கடிகள் , அழுத்தங்களுக்கு மத்தியில் நேர்த்தியாக அர்பணிப்புடன் நடாத்தி வருகின்றனர். இதற்கு பல விளையாட்டுக் கழகங்களும், அதன் பொறுப்பானவர்களும், கழகத்தின் பெயரையும், இனத்தின் பெயரையும், மண்ணின் மகுடமான மாவீரர்களுக்கும், மதிப்பளித்து விளையாட்டு வீரனுக்குரிய பாங்குடன் நடந்து வரும் வீரர்களுடன் 2017 மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை பொபினி நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் காலை 11.00 மணிக்கு 1989 ம் ஆண்டு இந்திய ராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் ரூபனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம், வல்வை புளுஸ் விளையாட்டுக்கழகம், நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம், யாழ்டன் விளையாட்டுக்கழகம் பங்கு பற்றி சிறப்பித்தன. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையினர் தமது நேரடி நிர்வாகத்தின் மூலம் இப்போட்டிகளை நடாத்தியிருந்தனர். வீரர்கள் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கு பற்றி சிறப்பித்திருந்தனர்.