பிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 6வது தடவையாகநடாத்திய கர்நாடகசங்கீத இசைத்துளிர் விருதுக்கான போட்டி பிரான்சு பாரிசு புறநகர்பகுதியில் ஒன்றான பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் கடந்த 18ம் திகதி சனிக்கிழமையும், 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு ஆரம்ப மாவீரர் வணக்க நிகழ்வாக ஈகைச்சுடரினை 11.11.1993ல் ஆனையிறவு முகாம் சமரில் வீரச்சாவடைந்த இளங்கீரன் அவர்களின் சகோதரி ஏற்றி வைத்து மலர்வணக்கம் செய்ய அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கினை நிகழ்ச்சியின் நடுவர்களாக வந்திருந்தவர்களும் அவர்களுடன் தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்களும் உதவிப் பொறுப்பாளர் ஆசிரியர் கட்சன் அவர்களும், கலை பண்பாட்டுக்கழக உறுப்பினர் திருமதி. பூபதி அவர்களும், உறுப்பினர்களும் தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு. து.மேத்தா, மற்றும் மாவீரர்பணிமனை பொறுப்பாளர் திருமதி. நி.முகுந்தினி அவர்களும் ஏற்றி வைக்க நடுவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
போட்டியின் நடுவர்களாக சங்கீதவித்துவான், சங்கீதபூசணம் அமரர். சண்முகரட்ணம் அவர்களின் புதல்வர் திரு. பிரணவநாதன் அவர்கள் (Nஐர்மனி) , நுண்கலைமானி, கலாவித்தகர் திருமதி. தர்மீகா முரளீதரன் அவர்கள் (பிரான்சு), இசைக்கலைமானி திருமதி. ஞானாம்பாள் விஐயகுமார் ( Nஐர்மனி ) அவர்களும் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
வரவேற்புரையை கலைபண்பாட்டுக் கழக உதவிப்பொறுப்பாளர் திரு. கட்சன் வழங்கியிருந்தார்.
18ம் 19ம் நாளில்; வயலின், மிருதங்கம், குரலிசைகீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவுக்கும், அதிமேற்பிரிவு, அதிஅதிமேற்பிரிவான அனைத்துப்பிரிவுகளுக்குமான போட்டிகள் நடைபெற்றன. நடைபெற்றபோட்டியில் இம்முறை கடந்த ஆண்டுகளைவிட இந்தத்தடவையும் ஏனைய போட்டிகள் போன்று அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இசையின் அடிப்படையாகக் கருதப்படும் கர்நாடக இசையில் எமது தேசக்குழந்தைகளைப் பயிற்றுவித்து, போட்டிகளில் துணிவுடன் பங்கு கொள்ள வைத்த ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பிலும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் சார்பிலும் நன்றியை தெரிவிக்கப்பட்டது. ஓவ்வொரு மாணவர்களும் தமது திறமையைக் காட்டுவதற்கான பெரு முயற்சியை தந்திருந்தனர். பாரதி கண்ட புதுமைப்பெண் போல இரண்டு பிரிவுகளில் மிருதங்கப் போட்டியில் பெண் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 18ம்நாள் நடைபெற்ற போட்டிகள் மிகவும் காத்திரமான போட்டிகளாக இருந்தமையால் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றிருந்தது. 19ம் நாள் போட்டியில் ஒவ்வொரு மாணவர்களின் அற்புததிறமைகள் வெளிக்கொணரப்பட்டதைக் காணக்கூடியதாகவும் இருந்தது.
வயலின்தனிநபர்மத்தியபிரிவு
1ம் இடம் : செல்வன் ராம்குமார் ராகரன்
2ம் இடம் : செல்வி. மகிந்தன் மகிசா
3ம் இடம் : செல்வி. அகிலன் ஆர்த்தி
வயலின் மேற்பிரிவில்
1ம் இடம்: செல்வி. சிவானந்தரா ஐhகுந்தவி
2ம் இடம்: செல்வி. அரியரட்ணம் லசனா
3ம் இடம் : செல்வன். விபுஸ்சன் பரமகம்சன்
வயலின் அதிமேற்பிரிவு
1ம்.இடம் : செல்வன். பிரகாஸ் பகீதரன்
2ம் இடம் : செல்வன். கயேந்திரன் கவியாழன்
3ம் இடம் : செல்வன். தேவன் அகிதன்
வயலின் அதிஅதி மேற்பிரிவு
1ம் இடம் : செல்வன். பரமேஸ்வரலிங்கம் சார்ல்ஸ்
2ம் இடம் : செல்வி. திலீப்குமார் தானுகா
மிருதங்கம் மத்தியபிரிவு
1ம் இடம் : செல்வன். லக்ஸ்மன் கரி
2ம் இடம் : செல்வன். கணேசலிங்கம் துவாரகன்
3ம் இடம் : செல்வன். முத்துக்குமார் முகிலன், மற்றும் செல்வன். கணபதிப்பிள்ளை கார்த்தி ஆகிய இருவர் பெற்றுக்கொள்கின்றனர்.
மிருதங்கம் மேற்பிரிவு
1ம் இடம் : செல்வன். புஸ்பாகரன் அபினாஸ்
2ம் இடம் : செல்வன். மகேந்திரம் பகிர்தன்
3ம் இடம் : செல்வன். கிருஸ்ணகுமார்அபீசன் , செல்வன். ஆகாஸ் பகீரதன் ஆகிய இருவர் பெற்றுக்கொள்கின்றனர்.
மிருதங்கம்; தனிநபர் அதிமேற்ப்பிரிவு
1ம் இடம் : செல்வன். சார்ல்ஸ் கஸ்டன் மெல்வின்
2ம் இடம் : செல்வன். முத்துத்தம்பி காண்டீபன்
3ம் இடம் : செல்வி. புஸ்பாகரன் அட்சயா, செல்வன். சிற்சபேசன் ஆகாஸ்ஆகிய இருவர்பெற்றுக்கொண்டனர்.
மிருதங்கம்;தனிநபர்அதிஅதிமேற்ப்பிரிவு
1ம் இடம் : செல்வன். நேரியூஸ் அலன்
2ம் இடம் : செல்வன். மார்க்கண்டு nஐனோர்டன்
3ம் இடம் : செல்வன். நேசராசா சங்கீர்த்தனன்
குரலிசைதனிநபர்மத்தியபிரிவு
1ம் இடம் : செல்வன். சுரேஸ்குமார் சாகித்தியன்
2ம் இடம் : செல்வி. ஐPவராஐh ப்ரத்யங்கிரா
3ம் இடம் : செல்வி. சிறீரங்கன் கரிணி மற்றும் அகிலன் அஸ்வின் ஆகிய இருவர் பெற்றுக்கொள்கின்றனர்.
குரலிசைமேற்பிரிவு
1ம் இடம் : செல்வி. சிறீதரன் ஆரபி
2ம் இடம்: செல்வி. சிறீசுதேஸ்கரன் வருசினி
3ம் இடம்: செல்வி. சிவானந்தராஐh குந்தவி, மற்றும் செல்வி. சண்முகநாதன் சாய்சகானா ஆகிய இருவர் பெற்றுக்கொள்கின்றனர்.
19.03.2017 (2ம் நாள்) போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் நடாத்தும் இசை வேள்வி போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக மாவீரர் நினைவு ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது. ஈகைச்சுடரினை லெப். கேணல் நித்திலன் அவர்களின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது. இன்றைய போட்டியின் நடுவர்கள் மற்றும் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன், உதவிப்பொறுப்பாளர் திரு. கட்சன், திரு. திருமாறன் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. பாலசுந்தரம் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர். நடுவர்கள் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளரால் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
போட்டிகள் முறையே குரலிசை தனிநபர் ( கீழ்ப்பிரிவு, அதிமேற்பரிவு, அதிஅதிமேற்பிரிவு )
குழுப்போட்டிகள் வயலின், கீழ்பிரிவு, மேற்பிரிவு,
குரலிசை கீழ்பரிவு, மேற்ப்பிரிவு போட்டிகளுடன் சிறப்பு இசைநிகழ்வாக 2016 இசைத்துளிர் விருதை பெற்றுக்கொண்ட செல்வன் நிரூசன் செல்வராஐh அவர்கள் தனது கலை வெளிப்பாட்டையும் வழங்கியிருந்தார்.
கலைபண்பாட்டுக்கழத்தினால் சிறப்புரையை தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் சார்பாக சங்கீதபூசனம்; ஆசிரியர் திரு. சேயோன் அவர்கள் ஆற்றியிருந்தார். பிரதான நடுவராக கடமையாற்றிய மிருதங்க ஆசிரியர் திரு. பிரணவநாதன் அவர்கள் தனது கருத்தக்களை தெரிவித்திருந்தார். பிரான்சில் உள்ள இசை ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களையும் மிகவும் அர்ப்பணிப்போடு வளர்த்திருக்கின்றமை ஒவ்வொரு போட்டியாளரின் திறமையால் தாம் நடுநிலைமை வகிக்க மிகவும் சிரமப்பட்டதையும் கலை ஆசிரியர்களுக்கும், எமது எதிர்கால சந்ததியை கலைரீதியாகவும், அனைத்து துறைகள் ஊடாகவும் அர்ப்பணிப்புடன் வளர்த்து போட்டிநிகழ்வுகளை நடாத்தி ஊக்கப்படுத்தி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும், தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்திற்கும் தனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்திருந்தார்.
நடுவர்களுக்கான மதிப்பளித்தல், கர்நாடக ஆசிரியர்களுக்கான மதிப்பளித்தலும் நடைபெற்றதோடு, இசைவேள்வி 2017 ல் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றன. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் மற்றும் மாவீரர்பணிமனை, விளையாட்டுத்துறை, தமிழீழ உணவகம் பொறுப்பாளர்கள் மற்றும் கலை ஆசிரியர்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர்.
தமிழர்கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய இசைவேள்வி 2017 ன் இசைத்துளிர்விருதினை செல்வன். இராஐலிங்கம் றொசான் பெற்றுக்கொண்டார். இரண்டு நாட்களும் நடைபெற்ற போட்டிகளுக்கு காலை முதல் இரவு 21.00 மணிவரை குழந்தைகளும் பெற்றோர்களும் சலிக்காமல் இருந்ததும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழீழ உணவகம் குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்றவாறு உணவுகளை தயார் செய்து வழங்கியிருந்தனர். காலை முதல் இரவு வரை மண்டபம் நிறைந்த மக்களாவே இருந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டியும் தமிழர் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றிபெற்றவர்களின் விபரம்
குரலிசை ( தனிநபர்) கீழ்ப்பரிவு
1ம் இடம் : செல்வி. இதயமூர்த்தி வாசகி
2ம் இடம்: செல்வி. ஐPவராஐh ப்ரசநிதி
3ம் இடம் : செல்வி. சுரேஸ்குமார் தமிழினி
குரலிசை ( தனிநபர்) அதிமேற்பிரிவில்
1ம் இடம் : செல்வி. எட்வேட் லூயிஸ் அநோஐpனி
2ம் இடம்: செல்வி. சிவானந்தராஐh ஆரபி
3ம் இடம் : செல்வன். சிவானந்தராஐh ராம், மற்றும் செல்வி. தர்மகுலசிங்கம் ஆரணி ஆகிய இருவர் பெற்றுக் கொள்கின்றனர்.
குரலிசை ( தனிநபர்) அதிஅதிமேற்பிரிவில்
1ம் இடம்: செல்வி. சிவலோகநாதன் நிசாங்கனி
2ம் இடம்: செல்வி. சோதிராசா சோனா
3ம் இடம்: செல்வி. திலீப்குமார் திசானிகா, செல்வி. கணேஸ்வரன் சுவீனா
குரலிசை (குழு )கீழ்ப்பிரிவு
1ம் இடம் : இசைக்கதம்பம் இசைக்கல்லூரி
2ம் இடம் : அஸ்டலக்சுமி இசைக்கல்லூரி
3ம் இடம் : திறான்சி தமிழ்ச்சோலை, சாகித்தியலயம் இசைப்பள்ளி ஆகிய இரு பாடசாலைகள்
பெற்றுக்கொள்கின்றன.
குழு வயலின் கீழ்ப்பிரிவு
1ம் இடம் : அம்பாள் இசைப்பள்ளி
2ம் இடம்: ஓன்னேசுபுவா திறான்சி தமிழ்ச்சோலை
குழு வயலின் மேற்பிரிவு
1ம் இடம் : லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலை
2ம் இடம்: அம்பாள் இசைப்பள்ளி
3ம் இடம் : சோதியா கலைக்கல்லூரி
குழு குரலிசை மேற்ப்பிரிவு
1ம் இடம் : இசைக்கதம்பம் இசைக்கல்லூரி
2ம் இடம் : சோதியா கல்லூரி
3ம் இடம் : இசைக்கதம்பம் இசைக்கல்லூரி, ஆதிபராசக்தி கலைப்பள்ளி லாககூர்னோவ்
தமிழர்கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திய இசைவேள்வி 2017 ன் இசைத்துளிர்விருதினை செல்வன். இராஐலிங்கம் றொசான் பெற்றுக்கொண்டார்.
ஊடகப்பிரிவு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு