முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ கடற் படையிலிருந்து விலகும் இராஜினாமாக் கடிதத்தை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா நிராகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கடற்கடையில் பணிபுரியும் யோசித ராஜ பக்ஷ, பதவி விலகுவதற்கான கடிதத்தை தேர்தல் தினத்திற்கு மறுநாள் கடற்படைக்கு வழங்கியிருந்தார். இருந்தாலும் இந்த பதவி விலகலுக்கு கடற்படை தளபதி அனுமதி வழங்கவில்லை என ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை யோசித ராஜபக்ஷ கடற்படையில் இணைந்த விதம், வெளிநாட்டு பயிற்சிகள் பெற்றமை கடமையி லிருந்தவாறு அரசியல் செய்தமை என்பன குறித்து விசாரணை நடத்துமாறு ஜே. வி. பி. பாதுகாப்பு செய லாளரை கோரியு ள்ளது.