பன்னங்கண்டி மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காணியை குத்தகைக்கு வழங்குமாறு விடுத்த ஆலோசனையும் நிராகரிக்கப்பட்டு சொந்தமாக வழங்க தீர்மானிக்கப்ட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை பதினைந்தாவது நாள் முடிவுக்கு வந்துள்ளது.
இன்று பிற்பகல் பன்னங்கண்டியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரன் மற்றும் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் சென்று சந்தித்து காணிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.
இவ் உறுதிமொழி வழங்கப்பட்டதனையடுத்து பதினைந்து நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்கள் தங்களின் போராட்டத்தை இன்று மதியத்துடன் நிறுத்தியுள்ளனர்.