காத்தான்குடி பகுதியில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமியொருவர் உரிழந்துள்ளார்.

0
260

புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த ஜி.பாத்திமா ஹதீஜா (வயது 9) எனும் சிறுமியே டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று, குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதையடுத்து தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த சிறுமி, வியாழக்கிழமை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
இச் சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் இது வரைக்கும் 36 பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here