இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு ஆட்சிபீடம் ஏறிய பின்னரும் சித்திரவதை சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து வருவதாக பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான திட்ட நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லாட்சி பொறுப்பேற்ற பின்னரும், ஆறு சித்திரவதை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2015.01. 08 அன்று முன்னாள் அரச தலைவரின் ஆட்சி வீழ்த்தப்பட்டு, சிறுபான்மை மக்களின் பேராதரவுடன் மைத்திரிபால சிறிசேன அரச தலைவராக ஆட்சி பீடம் ஏறினார்.
இந்த நல்லாட்சி அரசு நாட்டில் ஏற்பட்டது முதல் இதுவரை ஆறு கொடூரமான சித்திரவதை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் ஆறாவது சம்பவமானது கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.