உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில், நிதியத்தின் பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பாரிசில் அமைந்துள்ள உலக நாணய நிதியத்தின் தலைமையகத்தில், இன்று காகித உறையினுடாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு வெடித்ததனால், தலைமையகம் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காகித உறையை பிரித்த நிதியத்தின் பணியாளர் காயமுற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், கடந்தவாரம் ஜேர்மனியின் நிதி அமைச்சருக்கு வெடிகுண்டுடன் அனுப்பப்பட்ட காகித உறைக்கும் எதாவது தொடர்புள்ளதா என பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.