சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ நீதிமன்றத்தால் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் , ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரச தலைவர் தேர்தல் காலத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான இரண்டு கோடியே 90 இலட்சம் ரூபா நிதியை பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்க்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு இலட்சம் பஞ்சாங்க கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, பஷில் ராஜபக்க்ஷவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.