தீர்மானத்தை இலங்கை நிறைவேற்றத் தவறின் ஐ.நா. பொதுச் சபை மூலம் பன்னாட்டுப் பொறிமுறை – வடக்கு மாகாண சபையில் நிறைவேறியது தீர்மானம்
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் இணை அனுசரணையு டன் நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கையால் அதனுடைய சொந்தக் கடப்பாட்டை நடை முறைப்படுத்த முடியாத அல்லது விரும்பாத நிலையில் இந்த விடயத்தை ஐ.நா. மனிஉரிமைகள் சபை ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆகியவற்றின் மூலம் பன்னாட்டு நீதிப் பொறிமுறைக்கு உட்படுத்துமாறு வடக்கு மாகாண சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய சிறப்பு அமர்வின்போது ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தப் பிரேரணையை முன்மொழிந்தார்.
அவர் தனது பிரேரணையில் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இணையனுசரணை வழங்கப் பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போதிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதும் அங்கீகரித்துள்ளதும் மற்றும் ஐ.நா. சபைக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் உறுதியளித்துள்ளதுமான அதனுடைய பொறுப்புக்கூறல் செயன் முறையில் பன்னாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களை ஈடுபடுத்துதல் போன்றவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
உண்மையானதும், நீதியானதும் மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வின்றி இலங்கையில் நல்லி ணக்கமோ அல்லது நிலையான சமாதானமோ சாத்தியமற்றது.
இந்தச் சபையானது இலங்கையிடம் பன்னாட்டுப் பொறுப்புக் கூறும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுகோள் விடுக்குமாறும், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் 2015 ஆம் ஆண்டு இலங்கை மீதான விசாரணை அறிக்கையின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு அமைவாக ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடுமாறும், தமிழ் மக்களுக்கு ஐ.நா.சபையின் மூலம் அரசியல் தீர்வைப் பெற்றுத் தருமாறு ஐ.நா. சபையிடமும் பன்னாட்டுச் சமூகத்திடமும் கோரு கின்றது.
தமிழ் மக்கள் இலங்கையின் இணைந்த வடக்கு-–கிழக்கு பிராந்தியத்திலுள்ள அவர்களுடைய மரபுவழித் தாயகத்துக்கு உரித்துடைய ஓர் தேசிய இனம் என்பதையும் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அங்கீகரித்துக் கொண்டு இலங்கை அரசானது ஆகக்குறைந்தது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களைக் கொண்ட முழுமையா னதும் பூரணமானதுமான கூட்டாட்சி முறைமையை அளித்து அதனை அரசமைப்பில் வெளிப்படையாக பிரகடனப்படுத்தி அங்கீகரிக்கின்றதுமான நடுநிலமையானதோர் அரசியல் தீர்வை வழங்கவேண்டும் – என்று முன் மொழிந்தார்.
இந்த பிரேரணையைச் சபைக்குச் சமர்ப்பிக்கும்போது சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தப் பிரேரணையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். இல்லாதுவிட்டால் சபையிலிருந்து வெளியேறிவிடுவதாக க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். அதேபோல எங்களுக்குத் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்மானமும் சில தினங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட தீர் மானங்களும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.
இந்தத் தீர்மானம் தொடர்பாக எங்கள் கட்சித் தலைமைகளுடன் கதைத்த பின்னர்தான் விவாதிக்க முடியும் என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.விந்தன், எனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சபை அமர்வுக்கான குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த பிரேரணையை எனது கட்சித் தலைவரிடம் தெரியப்படுத்தியிருந்தேன். அதனைப் பார்த்த அவர் இந்தப் பிரேரணை யில் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. இது இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங் கும் வகையில் அமைந்துள் ளது. தீர்மா னத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும் அல்லது சபையை விட்டு வெளிநடப்பு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
சிறிது நேரம் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தப் பிரேரணையை முழுமையாக எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் முன்மொழியட்டும். அதன் பின்னர் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர் பாக ஆராயப்பட்டு உறுப்பினர்களின் ஆதரவு கோரப்பட்டுச் சபைக்குத் தீர்மானம் சமர்ப்பிக்கப் படும் என்று அறிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கத்தால் தீர்மானம் முன்மொழியப் பட்டதும் ஒவ்வொரு விடயங்களையும் ஆராய்ந்தனர். எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தீர்மானத்தில் உள்ள அம்சங்களில் முதல் மூன்று விடயங்களில் மாற்றங்களைச் செய்வதற்கு அனைத்து உறுப் பினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
ஒவ்வொரு தீர்மா னங்களும் சபையில் வாசிக்கப்பட்டு அதில் உள்ள சொற்கள் சில மாற்றம் செய்யப்பட்டன. சொற்களை மாற்றம் செய்யும்போது உறுப்பினர்களிடையே குழப்ப நிலையும் ஏற்பட்டது.
தீர்மானத்தின் சில சொற்பதங்கள் திருத்தி யமைக்கப்பட்டுச் சபையின் அங்கீகாரத்துக்கு வந்தது. இது தொடர்பாக வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்ததாவது,
எமது சபையில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் சாதாரண விடயமல்ல. இந்த தீர்மானத்தில் பல சொற் பிரயோகங்கள் மாற்றியமைக்க வேண்டிய தேவையுள்ளன. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் பேசப்பட்ட தீர்மானம் கொண்டு வந்துவிட்டுப் பின்னர் இதற்குள் அரசியல் தீர்வை ஏன் சொருகியுள்ளனர். இதனை நீக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த தீர்மானம் தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவிக்கையில், ஐ.நா. விவகாரத்தை வைத்துச் சிலர் கெட்டிக்காரர்கள் என்று பெயர் எடுக்க முயல்கின்றனர். இந்த விட யங்களை ஏற்கின்றவர்கள் தியாகிகளாகவும் நல்லவர்களாகவும் இதனை எதிர்க்கின்றவர்கள் துரோகிகள் என்றும் சிலரால் கூறப்படும். ஐ.நா.வில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறியா மல் அல்லது அவதானிக்காமல் கால அவகாசம் என்ற சொற்பதத்தை மட்டும் பலராலும் பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாகக் கதைத்தால் அவர்கள் துரோகிகள் என்ற கலாசாரம் வந்துவிட்டது. கால அவகாசம் வழங்குவது என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இல்லை. கால அவகாசத்தையும் கோரவில்லை. அவர்களுடன் பேரமும் பேசப்படவில்லை. அதில் உள்ளவர் களில் ஒருசாரார் ஆதரிப்பவர்களாகவும் மற்றொரு சாரார் எதிர்ப்பவர்களாகவுமே இருந்தது. கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஐ.நா. கூட்டமைப்பி டம் கேட்கப் போவதுமில்லை.
இலங்கை அரசிடம் கேட்கப் போவதுமில்லை. ஐ.நா. உலக நாடுகளுடன் கதைத்தே இதனைக் கையாளும். வடக்கு முஸ்லிம் மக்கள் சார்பில் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றேன் – என்றார். ஆளும் கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரன், இந்தத் தீர்மானம் தொடர்பில் கட்சி சார்ந்து செயற் படாது மக்கள் நலன் சார்ந்து செயற்படுங்கள். இலங்கை அரசுக்குக் கால அவகாசம் வழங்கும் வகையில் உள்ள சொற்பதங்கள் மாற்றியமைக்கவேண்டும் – என்றார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தெரிவிக்கையில், ஏன் இப்படி ஒரு சிறப்பு அமர்வு ஒழுங்கு படுத்தப்பட்டது. நாங்கள் சும்மா அங்கிருந்து இங்கு வந்து அமர்ந்திருந்துவிட் டுப் போவதுதான் நடப்பதே தவிர ஐ.நா.வில் கால அவகாசம் வழங்கப்படுவதுதான் நடக்கப் போகின்றது – என்றார்.
வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா நடுநிலைமை வகிக்க, எதிர்க்கட்சி உறுப்பி னர்களான தர்மபால மற்றும் ஜெயதிலக ஆகியோர் இந்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏனைய உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.