கடத்தப்பட்டவர்களை சிறீலங்கா கடற்படையினர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிக் களனி கங்கையில் வீசியதா கவும், திருகோணமலையில் அமைந்திருந்த நிலத்தடி முகாமில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பொலித்தீனில் சுற்றி கெப் வண்டியில் முகாமுக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் சிறீலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்து 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமற்போகச் செய்யப்பட் டமை தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் நேற்றுமுன்தினம் (13)விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, முதன்மைச் சாட்சியாளரான கப்டன் வெகெதர ஆகியோரின் வாக்கு மூலங்களின் அடிப்படையில் மன் றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மன்றுக்கு மேலதிக விசாரணை தொடர்பில் எடுத்துரைத்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி முதல் இந்த விவகாரம் தொடர்பில் நான் விசாரணை செய்து வருகின்றேன். கடத்தப்பட்ட 11 பேரும் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள பிட்டு பம்பு, திருகோணமலை நிலத்தடிச் சிறைக் கூடமான கன்சைட் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்குத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
இந்தக் கடத்தல்கள் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சியின் கீழ் இயங்கிய குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள மைக்கான ஆதரங்கள் உள்ளன. அவை அனைத்தும் இன்று மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் பல தக வல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கடத்தல் தொடர்பிலான முதல் சந்தேகநபரான சம்பத் முனசிங்கவின் கீழ் சேவையாற்றிய உபுல் பண்டார எனும் கடற்படைச் சிப்பாய் தன்னிடம் தெரிவித்தார் என இரண்டாவது சந்தேக நபரான கொமாண்டர் சுமித் ரணசிங்க அவரது வாக்குமூலத்தில் சில விடயங்களை வெளிப்படுத் தியுள்ளார். கடத்தப்பட்ட ஐந்து மாணவர்களில் நால்வரை திருமலைக்குக் கொண்டு போகும் வழியில் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிக் களனி கங்கையில் வீசிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பிரதான சாட்சிகளில் ஒருவரான கப்டன் வெலகெதர தனது சாட்சியத்தில் பல தகவல்களை வெளிப்படுத்தினார். திருமலை கன்சைட் முகாமில் சேவையில் இருந்தபோது அதனுள் இருந்து கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பொலித்தீனில் சுற்றி கெப் வண்டியில் முகாமுக்கு வெளியே எடுத்துச் செல்வதை தான் அவதானித்தார் என அவர் எம்மிடம் சாட்சியம் அளித்துள்ளார்.
கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு கடற்படைச் சிபாயின் வாக்கு மூலத் துக்கு அமைவாக அங்கு இருந்த அனைவரும் படிப்படியாகக் கொல்லப்பட்டுள்ளமை வெளிப் படுத்தப்பட்டது. இந்த ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரும் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விசாரணைகள் கடற்படையை இலக்காக வைத்து இடம்பெறுவதாகவும் தேசிய பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் எனவும் பலரால் கூறப்படுகிறது. உண்மையில் இந்த விசாரணைகளால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய வின் உத்தரவுக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்துடன் கடற்படையினருக்கு உள்ள தொடர்பு குறித்து நாம் முதலில் கோத்தபாய ராஜபக்சவிடம் கூறிய போது, இது தேசிய பாதுகாப்பு விவகாரம் அல்ல.
அவர்கள் தனிப்பட்ட ரீதியில் செய்துள்ளார்கள். நீங்கள் உங்கள் விசாரணையை தொடருங்கள் என்று அவர் எமக்கு உத்தரவிட்டார். அப்போதைய தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஹெந்த விதாரணவு டனும் நாம் இது தொடர்பில் கலந்துரையாடியபோது அவரும் இதனையே பதிலாக அளித்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எந்த விசாரணையை யும் முன்னெடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க கருத்துக்களை முன்வைத்தார். இந்தச் சம்பவம் குறித்து நேரடியாகத் தொடர்புபட்ட மேலும் இருவர் கைது செய்யப்படவுள்ளனர். அவர்களைத் தேடி வருகின்றோம். இதனைவிட இந்த விவகாரத்துடன் கட்டளை ரீதியாக அல்லது ஆலோ சனை ரீதியாகத் தொடர்புபட்ட உயர் அதிகாரிகள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் நாம் தொடர்ந்து பரிசீலித்து வருகின்றோம் – என்றார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணியான அச்சலா செனவிரத்ன வாதிட்டார். ஒவ்வொரு முதல் அறிக்கையிலும் பெயர் குறிப்பி டப்பட்டுள்ள லெப்டினன்ட் கொமான்டர் ஹெட்டி ஆராச்சி இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக நாம் கேள்விப்படுகிறோம். இதனைவிட இந்த வழக்கின் முதல் சந்தேகநபர் லெப்டினன்ட் கொமாண் டர் சம்பத் முனசிங்க பிணையில் உள்ளார்.
இந்த வழக்குடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்துத் தெளிவாக விசாரணைகளில் வெளிப்ப டுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் எதிராக குற்றவியல் சட்டத்தின் 296 ஆவது அத்தி யாயத்துக்கு அமைய குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவரது பிணையை நீக்கி அவரையும் விளக் கமறியலில் வைக்க வேண்டும் என்று கோரினார்.
இதன் பின்னர் சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பிணை கோரினார். முதன் மைச் சாட்சியான வெலகெதர மனிதக் கடத்தல் சம்பவம் தொடர்பில், தற்போது கைதாகியுள்ள 2 ஆம் சந்தேக நபருடன் கோபத்தில் இருந்தார். அதனால் பொய்யான விடயங்களை முன்வைப்பதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர். யாரோ சிலரின் தேவைக் காக குற்றப் புலனாய்வுப் பிரிவு, கடற்படைப் புலனாய்வுப் பிரிவை இலக்கு வைப்பதாகக் குற்றம் சுமத்தியதுடன் இந் தக் கைதுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டிப் பிணை கோரினர்.
சட்டமா அதிபர் பிணை வழங்கக் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். 7 ஆண்டுகளுக்கு முன்னர் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் 7 வருடங்களாக இல்லை என்ப தால் அவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவே அர்த்தம். இதற்கு பிணை வழங்க முடியாது என்றார். பாதிக் கப் பட்டவர் கள் தரப்பும் பிணைக்கு ஆட்சேபம் வெளியிட்டது.
பிணை தொடர்பில் ஆட்சேபங்களை எதிர்வரும் 24 ஆம் திகதி எழுத்து மூலம் மன்றில் சமர்ப் பிக்க உத்தரவிட்ட நீதிவான் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்து அதுவரை விளக்க மறியலில் இருந்து வரும் இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்து அவ்வாறே தடுத்து வைக்க உத்த ரவிட்டார். பிணையில் உள்ள லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முன சிங்கவின் பிணையை நீக்கி அவரை புதிய குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைப்பதா? இல்லையா? என்பதையும் அந்தத் திகதியில் மன்றுக்கு அறியத்த ருமாறு சட்ட மா அதி பருக்கு நீதிவான் பணித்தார்.
Home
ஈழச்செய்திகள் கடத்தப்பட்டோரை துண்டு துண்டாக்கி களனி கங்கையில் வீசியது சிறீலங்காகடற்படை !