பதினான்காவது நாளாக கேப்பாபுலவு மக்கள் நிலத்தை விடுவிக்கும் போராட்டம் !

0
153

கேப்பாபுலவு சொந்த நிலத்தை பெற்றுக்கொள்வற்காக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதினான்காவது நாளாக தொடர்கின்றது.
தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு பிலக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த போராட்டம் கடந்த முதலாம் திகதி முடிவுக்கு வந்தநிலையில் கேப்பாபுலவு பூர்வீக நிலத்தை கோரி மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
2012 ஆம் ஆண்டு நலன்புரி நிலையங்களிலிருந்து மீள்குடியேற்றம் என தெரிவித்து அழைத்து வரப்பட்ட மக்கள் மாதிரிக்கிராமங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.
எனினும் கடந்த எட்டு வருடங்களாக அகதிகளாகவே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் தாம் அவ்வாறு வாழ்வதற்கு தயாரில்லை எனவும் எமது பூர்வீக நிலம் கேப்பாபுலவு கிராமம்தான் எனவும் அதிலே தம்மை குடியமர்த்துமாறும் தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here