சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வு நடைபெறவிருந்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதாக யாழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முருகையா சர்மலன் என்ற முன்னாள் பெண்புலிப் போராளி ஒருவரின் சகோதரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்கான முன் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரது தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக, அவரது சகோதரியின் அடையாள அட்டையையும் அவர் வைத்திருந்தார் எனவும் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் மீது இவ்வகையான குற்றங்களை சுமத்திய சிறீலங்கா அரசு போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் குற்றங்களை சுமத்த ஆரம்பித்துள்ளது .