குளத்திலிருந்து வந்துகொண்டிருந்த என் மீது காட் டுக்குள் இருந்துவந்த ஒருவர் தாக்குதல் நடத்தி என் சங்கிலியை அபகரிக்க முற்பட்டார். நான் கூச்சலிட்டு மல்லுக்கட்டவே அவர் எனது கழுத்தில் கூரிய ஆயதத்தினால் தாக்கிவிட்டு இராணுவ முகாம் பக்கமாகத் தப்பிச் சென்றார். ஆனால் அவர் இராணுவச் சீருடையில் இருக்கவில்லை. அவர் இராணுவத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். என்னால் அவரை அடையாளம் காட்டமுடியும்
இவ்வாறு கடந்த 3ஆம் திகதி கிளிநொச்சி – சாந்தபுரம் இரணைமடு காட்டுப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் நேற்றுக் கிளிநொச்சி நீதிமன்றில் திறந்த வாக்குமூலமொன்றைப் பதிவு செய்தார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண்ணும், அவரது மகனும் சுமார் ஒரு மணிநேரம் நீதிவான் முன் வாக்குமூலமளித்தனர்.பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த நீதிவான் எதிர்வரும் 15ஆம் திகதி இராணுவத்தினரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஒன்பதாம் திகதி சம்பவம் தொடர்பான அறிக்கை பொலிஸாரால் நீதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
முறைப்பாட்டை விசாரணை செய்த நீதிவான் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை (13ஆம் திகதி நேற்று) நீதிமன்றில் முன்னிலைப் படுத்தித் திறந்த வாக்குமூலத்தைப் பெறுமாறு பொலி ஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கிளிநொச்சி பொலிஸார் நேற்றுப் பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியிருந்தனர்.
கிளிநொச்சி – சாந்தபுரம் கிராமத்தில் கடந்த 3ஆம் திகதி மாலை இரணைமடுக் குளத்திற்கு நன்னீர் மீன்பிடித் தொழில் நடவடிக்கைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த பெண் மீது இனந்தெரியாத நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தியதுடன் அவரது கழுத்திலிருந்த தங்கச் சங் கிலியை அபகரிக்க முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரணைமடு இராணுவத் தலைமையகத்துக்குப் பின்புறமாக உள்ள காட்டுக்குள் மறைந்திருந்த ஒருவரே இவ்வாறு திடீரென குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்ட துடன் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்தப் பெண் குறித்த நபருடன் மல்லுக்கட்டியதை அடுத்து சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் கழுத்தில் குத்திவிட்டுத் இராணுவ முகாம் பக்கமாக தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த பெண்ணுக்கு முன்னால் சுமார் ஐம்பது மீற்றர் தூர இடை வெளியில் சென்றுகொண்டிருந்த அவரது மகன், தாயின் அலறல் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த் துள்ளார். அப்போது அவர் தான் ஏற்கனவே பற்றைக்குள் அவதானித்த நபர் தாயாரைத் தாக்கி விட்டு இராணுவமுகாம் பக்கம் வேகமாக ஓடியதைக் கண்டதாகக் கூறியுள்ளார்.
அவர் ஊதா நிற மேலாடை அணிந்திருந்ததாகவும், சந்தேகநபரை அடையாளம் காட்டுவதற்கு தயாராக உள்ளதாகவும் மகன் குறிப்பிட்டார். இச்சம்பவத்தையடுத்து சாந்தபுரம் பகுதியில் அமை தியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.