திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர் ஒருவர், இன்று (13)காலை உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில், டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்தோரின் தொகை, ஒன்பதாக உயர்ந்துள்ள நிலையில், நேற்றையதினமும் இருவர் உயிரிழந்திருந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, மாஞ்சோலைச்சேனை 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கட்ட மிரான் பைசல் (வயது 39) என்ற, இரண்டு பிள்ளையின் தந்தையே, இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது சகோதரி பாத்திமா நபீயா (வயது 36), டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், கடந்த வெள்ளிக்சிழமை (10) உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.