காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவில் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.
தாம் பல்வேறுபட்ட ஆணைக்குழுக்களில் சாட்சியமளித்தாகவும், எனினும் அவை தூக்கி எறியப்பட்டுள்ளதாகவும் இறுதி யுத்தத்தில் தனது மகளை இராணுவத்திடம் ஒப்படைத்த தாய் தெய்வானை தெரிவித்தார்.
தாம் பொம்மைகள் அல்ல என தெரிவிக்கும் மக்கள் அரசியல்வாதிகளும் தங்களை வாக்குகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவதாகவும், குற்றம்சுமத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மிலேச்சதனமான யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் வட்டுவாகலில் இராணுவத்திடம் தமது உறவுகளை கையளித்ததாகவும் எனினும் இதுவரை தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமது உறவுகள் தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.