“ஐ.நா கடும் நிபந்தனையுடன் அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்” என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் இன்று காணாமல் போனோரின் உறவினர்களினால் மேற்கொள்ளப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட கொட்டகைக்கு முன்பாகவும் வீதியின் இரு மருங்கிலும் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான சந்திப்பு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10 மணியில் இருந்து 4 மணிவரை இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
“ஐ.நா நிபந்தனையுடன் அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கு எமக்கு உடன்பாடில்லை என எதிர்பு தெரிவித்தே இவ் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.