12ஆவது நாளாக கேப்பாபுலவு மண்மீட்பு போராட்டம், 2ஆவது நாளாக உண்ணாவிரதமும் தொடர்கின்றது!

0
120


கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் நிலங்களையும் கையகப்படுத்தியுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று(12) 12ஆவது நாளாக தொடரும் அதேவேளை தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கேப்பாபுலவில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதமும் 2ஆவது நாளாக தொடர்கின்றது.
கேப்பாபுலவு பிரதானவீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு படைத்தலைமையக நுழைவாயில் முன்பாக இந்த மக்களின் போராட்டமும் உண்ணாவிரதமும் இரவு பகலாக தொடர்கின்றது.
கேப்பாபுலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாபுலவு பூர்வீக கிராமம் ,சீனியா மோட்டை,பிலக்குடியிருப்பு ,சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு கேப்பாபுலவு பூர்வீக கிராமம் தவிர்ந்த ஏனைய அனைத்து கிராமங்களிலும் பெருமளவான பகுதிகள் இராணுவத்தால் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள்,வீடுகள்
பாடசாலை,வணக்கஸ்தலங்கள்,விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள்,வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 480 ஏக்கருக்கு மேலான மக்களின் நிலங்களில் 10க்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது.
தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 8வருடங்களாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் பலவடிவங்களில் போர்டட்ங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பலமுறை ஏமாற்றபடட இந்த மக்கள் ஆத்திரமடைந்தவர்களாய் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கடந்த முத்தலாம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here