கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும்,தமது சொத்துக்களான காணிகள் மற்றும் குடியிருந்த வீடுகள் என்பனவற்றையும் கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 11நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவ தலைமையக வாயில் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பதினொரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு தமது சொந்த நில விடுவிப்பு தொடர்பில் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கப்பெறாதநிலையில் இன்றுமுதல்(11,03) குறித்த கிராமத்தைசேர்ந்த இளைஞர் மற்றும் முதியவர் இணைந்து 2பேர் தீர்வு கிடைக்கும் வரையிலான உண்ணாவிரதத்தை படைத்தலைமையக வாயில் முன்பாக முன்னெடுத்துள்ளனர்.
Home
ஈழச்செய்திகள் நிலங்களை மீட்க்க – தீர்வு கிடைக்கும் வரையிலான உண்ணாவிரதத்தில் கேப்பாபுலவு மக்கள்!