எங்கள் பூர்வீகக் காணிகளுக்கு நட்ட ஈடு ஒன்றும் வேண்டாம். எங்களுக்கு எங்கள் பூர்வீக காணிகளைத் தாருங்கள் இல்லாத விடத்து எங்களை நாடு கடத்துங்கள்” என்று கேப்பாபிலவு தொடர் அற வழிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
கேப்பாபிலவு மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்களால் முன் னெடுக் கப்பட்டுள்ள தொடர் அறவழிப் போராட்டம் 10 ஆவது நாளாகவும் எத்தகைய உறுதி மொழிகளும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
”கூட்டு அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் இராணுவம் சுவீகரித்த 6 ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு மேல் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அதே போன்று எங் கள் பூர்வீக நிலத்தையும் விடுவியுங்கள். எங்கள் காணிகளுக்கு நட்ட ஈடுதருவதாகத் தெரிவித்தனர்.
நாங்கள் பரம்பரையாக வாழ்ந்த எங்கள் வாழ்வியல் நிலத்தைத் தாருங்கள் எத்தகைய நட்ட ஈட் டையும் நாம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை ” என்று கேப்பாபிலவு தொடர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.
கேப்பாபிலவில் உள்ள 482 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரி 138 குடும்பங்கள் கடந்த முத லாம் திகதி தொடக்கம் தொடர் அறவழிப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
”கேப்பாபிலவுக் காணியை விடுவிக்கக் கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில ஈடுபட்டபோது, விரைவில் காணிகளை விடுவிப்பதாக எமக்கு உறுதி மொழி வழங்கப்பட்டது. இன்று வரை எமக்கு எத்தகைய முடிவும் கிடைக்க வில்லை” என போராட் டத்தில் கலந்து கொண்ட ஆ. வேலாயுதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.