கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த முச்சக்கர வண்டி சாரதியின் கவனக்குறைவு காரணமாக முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாலத்துடன் மோதுண்டு விபத் துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் பலியானதுடன், இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஏ9 வீதி ஓமந்தை மகா வித்தியாலத்துக்கு அண்மையில் இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
முச்சக்கரவண்டியில் பயணித்த கொழும்பு மோதரையைச் சேர்ந்த கந்தையா மாரியாயி (வயது 56) என்ற குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரின் மகளின் பிள்ளைகளான எஸ். டிலானி (வயது 02), எஸ்.டெனுசன் (வயது 07) ஆகிய இரு சிறுவர்களும் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முச்சக்கரவண்டியில் பய ணித்த சாரதியும், காயமடைந்த இரு சிறுவர்களின் தாயாரும் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற ஒமந்தைப் பொலிஸார் விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.