பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரத்தை சுற்றி துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத கண்ணாடியால் செய்யப்பட்ட சுவர்கள் எழுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் உலகப் புகழ் வாய்ந்த ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த ஈபிள் கோபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இவர்களின் பாதுகாப்பு குறித்தும் தற்போது அரசுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தீவிரவாதிகள் பிரான்ஸில் நடத்திய தாக்குதலில் 238 பேர் கொல்லப்பட்டனர்.
ஈபிள் கோபுரம் முக்கிய சுற்றுலாப் பகுதி என்பதால் இங்கு வரும் பொதுமக்களை பாதுகாக்க அரசு ஒரு அதிரடி திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
ஈபிள் கோபுரத்தை சுற்றிலும் 8 அடி உயரத்தில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாது கண்ணாடி சுவற்றை எழுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், கண்ணாடி சுவற்றிற்கு உள்ளே சென்றுவிட்டால் எந்த திசையில் இருந்து பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முடியாது.
சுமார் 19 மில்லியன் டொலர் செலவில் சுவற்றை எழுப்பும் பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில தினங்களில் இப்பணி நிறைவடையும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.