சிறீலங்கா கடற்படையினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 53 பேரை விடுதலை செய்ய யாழ்.நீரியல்வளத்துறை திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற அனுமதியினையடுத்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினூடாகவே குறித்த மீனவர்களின் விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்தவாரம் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் தமிழ் நாட்டில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடுவிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.