ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று (09) நடைபெற்ற மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் வருடாந்த அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கின்றது. கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கை தொடர்பான எமது நிலைப்பாட்டை விபரமான முறையில் வெ ளிப்படுத்துவோம்.
இலங்கையானது 30/1 என்ற ஜெனிவா பிரேரணையை முழுமையாகவும் கால அட்டவணையின் அடிப்படையிலும் அமுல்படுத்தவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்றது என்றார்.