நூறு மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் கொட்டாஞ்சேனையில்மீட்பு !

0
104


சிறீலங்காவில் அதிகரிக்கும் போதைவஸ்து . தினமும் இது தொடர்பான செய்திகளே நாளேடுகளில் காணப் படுகின்றது. கேரளா கஞ்சா வே அதிகம் கைப்பற்றப்பட்டு வந்த நிலையில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய, ஹெரோயின் மற்றும் 60,000 ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு போதை பொருள் தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையின் மூலம், ஒருகிலோ ஹெரோயின் மற்றும் விற்பனை செய்யப்பட்டதாக கருதப்படும் 60,000 ரூபா பணம் மற்றும் இலத்திரனியல் பரிசோதனை உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன், 33 வயதான சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதி உடையதாக நம்பப்படுவதாகவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை வவுனியாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேரை வவுனியா உதவி மதுவரி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் வீதியில் முச்சக்கரவண்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு பேரைக்கைது செய்துள்ளதாகவும் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here