இலங்கை குறித்த விப­ர­மான அறிக்கை சில தினங்­களில்-அல் ஹுசைன்

0
121

 

இலங்கை மனித உரிமைகள் விவ­காரம் தொடர்பில் சில தினங்­களில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் அலு­வ­லகம் மனித உரிமைகள் பேர­வைக்கு விரி­வான விப­ரங்­களை சமர்ப்­பிக்கும் என்று ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் நேற்று தெரி­வித்தார்.
ஜெனி­வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் நேற்­றைய அமர்வின் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் வரு­டாந்த அறிக்­கையை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அல் ஹூசைன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
பல்­வேறு நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் தொடர்­பாக விரி­வான விளக்­கங்­களை நேற்­றைய தினம் அளித்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்­பாக சில தினங்­களில் விரி­வான விப­ரங்கள் பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளதால் அது தொடர்பில் வரு­டாந்த அறிக்­கையில் ஆழ­மாக ஆரா­ய­வில்­லை­யென குறிப்­பிட்டார்.
அவர் அங்கு குறிப்­பி­டு­கையில்:- ” இன்­றைய எனது வரு­டாந்த அறிக்­கையில் இலங்கை உள்­ளிட்ட ஒரு­சில நாடு­களின் மனித உரி­மைகள் குறித்து விப­ர­மான விட­யங்கள் எதுவும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. காரணம் இந்த 34 ஆவது கூட்டத் தொடரின் போது ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­க­மா­னது இலங்கை உள்­ளிட்ட சில நாடு­களின் மனித உரிமை தொடர்­பாக விரி­வான விப­ரங்­களை ஐ.நா. மனித உரிமை பேர­வைக்கு சமர்ப்­பிக்­க­வுள்­ளது. அதனால் இன்­றைய எனது அறிக்­கையில் இலங்கை தொடர்­பான விப­ர­மான விட­யங்கள் உள்­ள­டக்­கப்­ ப­ட­வில்லை”” என்றார்.
கடந்த 27 ஆம்­தி­கதி ஆரம்­ப­மான ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 24 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் 22 ஆம் திகதி இலங்கை தொடர்­பான செயிட் அல் ஹுசைனின் அறிக்கை மீதான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. அந்த விவா­தத்தின் பின்னர் எதிர்­வரும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பாக பிரிட்டன் கொண்­டு­ வ­ர­வுள்ள பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்­ளது.
இந்தப் பிரே­ர­ணை­யா­னது இலங்­கை­யா­னது நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­றலில் மேலும் முன்­னேற்­றங்­களை வெளிக்­காட்­டு­வ­தற்­காக இலங்­கைக்கு கால அவ­கா­சத்தை வழங்­கு­வ­தற்­கான பரிந்­து­ரையை உள்­ள­டக்­கி­யி­ருக்கும் என ஜெனிவா தக­வல்கள் தெரிவித்தன.
செயிட் அல் ஹூசைன் கடந்தவாரம் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டிருந்ததுடன் நல்லிணக்க செயற்பாடுகள் கவலையளிக்கும்வகையில் மெதுவாக இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here